கணவரின் நடத்தையில் சந்தேகம்: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

3 months ago 12

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி மல்லம்மா (வயது 26). டிரைவரான பசவராஜ், தனது மனைவியுடன் பெங்களுரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திம்மாரெட்டி லே-அவுட்டில் வசித்து வருகிறார். பெங்களூருவில் பசவராஜ் வாடகை கார் ஓட்டி வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல், நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பின்னர் வீட்டில் தனியாக இருந்த மல்லம்மா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பெல்லந்தூர் போலீசார் விரைந்து சென்று மல்லம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பசவராஜிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மல்லம்மா சந்தேகம் அடைந்ததாக தெரிகிறது. அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மல்லம்மா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article