கணவனை கொலை செய்து உடலை 2 துண்டுகளாக வெட்டிய மனைவி...கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

6 months ago 17

பெங்களூரு,

குடிபோதையில் இருந்த கணவரை கொன்றதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற பின்னர் அவரது முகத்தை ஒரு கல்லால் அடித்தும், உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரம் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"கர்நாடகா மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்தா இட்னாலி (வயது 40). அவரது மனைவி சாவித்திரி. குடிபழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீமந்தாவுக்கும் அவரது மனைவிக்கும் வெகு நாட்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி மதுபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் போட்டுள்ளார். ஸ்ரீமந்தாவின் சடலத்தை போலீசார் கடந்த மாதம் 10ம் தேதி கண்டெடுத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாருக்கு ஸ்ரீமந்தாவின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து சாவித்திரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

Read Entire Article