கணவனை உதறி தள்ளிவிட்டு 38 வயது ஊராட்சி தலைவி 22 வயது காதலனுடன் ஓட்டம்: செல்போன் சிக்னலை தேடி சென்ற போலீஸ், இறுதியில் செம டிவிஸ்ட்

2 months ago 15

ஆம்பூர்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைவிக்கு 38 வயதாகிறது. திருமணமாகி கணவருடன் வசித்த அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த ஊராட்சி தலைவி, கணவனை உதறி தள்ளிவிட்டு வாலிப காதலனுடன் தலைமறைவானார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவியின் குடும்பத்தினர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், ஊராட்சி தலைவியின் செல்போன் சிக்னலை வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த சிக்னல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஒரு இடத்தை காண்பித்துள்ளது. அங்கு போலீசார் நேற்று முன்தினம் விரைந்தனர். அப்போது, ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ஒரு மதவழிபாட்டு தலம் அருகே சிக்னல் காட்டியது. அந்த இடத்தில் செல்போன் வைத்திருந்த வாலிபரை மடக்கி ஊராட்சி தலைவியை எங்கே என்று கேட்டதும் குழம்பி போன அவர் திருதிருவென விழித்தார்.

விசாரணையில் அந்த நபர், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் எல்.மாங்குப்பத்தில் வசித்து வருவதாகவும், சில நாட்களுக்கு முன்பு புது செல்போன் எண்ணை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்தார். அந்த எண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இன்வேலிட் நம்பராக’ கருதி எல்.மாங்குப்பம் வாலிபருக்கு கம்பெனி வழங்கியது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை அந்த வாலிபர் காட்டியபிறகு அவரை விடுவித்து போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாயமான ஊராட்சி தலைவியையும் வாலிபரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post கணவனை உதறி தள்ளிவிட்டு 38 வயது ஊராட்சி தலைவி 22 வயது காதலனுடன் ஓட்டம்: செல்போன் சிக்னலை தேடி சென்ற போலீஸ், இறுதியில் செம டிவிஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article