கட்டிடத்தை இடித்தபோது மேல்தளம் தலையில் விழுந்து தொழிலாளி பரிதாப பலி

4 months ago 15

திருவள்ளூர்: பிரேக்கர் மிஷினைக்கொண்டு கட்டிடத்தை இடித்தபோது மேல்தளம் தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த செங்கழுநீர் கிராமம், லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (38). இவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இன்ஜினியரிடம் கட்டிடங்களை இடிக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பீமன்தோப்பு அருந்ததி பாளையத்தைச் சேர்ந்த ராகவன் என்பவருடைய கட்டிடத்தை செல்வம், தனபால் மற்றும் ஆறுமுகம் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மதியம் 1.45 மணியளவில் செல்வம் பிரேக்கர் மிஷினைக்கொண்டு அதிகமான பிரஷர் கொடுத்து மேல் தளத்தை இடித்துள்ளார். இதில் மேல் தளமானது இடிந்து செல்வத்தின் தலையின் பின்புறத்தில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வத்தின் உறவினர் சேகர் (58) என்பவர் புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கட்டிடத்தை இடித்தபோது மேல்தளம் தலையில் விழுந்து தொழிலாளி பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article