கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி - பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு

3 months ago 13

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர்.இதற்காக அந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா ரூ.15 கோடி பா.ஜ.க. வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தொலைபேசி வாயிலாக அந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கட்சி மாறுவதற்காக சிலருக்கு நேரடி சந்திப்புகளிலும், சிலருக்கு வேறு நபர்கள் மூலமாகவும் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே பா.ஜனதா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் இதுபோன்ற செயல்களில் அந்த கட்சி ஈடுபடுகிறது என்று கூறினார்.

Read Entire Article