கடையநல்லூரில் நாளை மின்தடை

1 month ago 6

கடையநல்லூர், டிச.11: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கடையநல்லூரில் நாளை (12ம் தேதி) மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post கடையநல்லூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article