சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்: அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

2 hours ago 3

மும்பை: 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப். 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கன், நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை அறிவிக்க நாளை வரை ஐசிசி கெடு விதித்துள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே சாம்பியன் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. மற்ற அணிகள் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் நாளை மும்பையில் கூடி அறிவிக்கும் என தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அறிவிப்பு தாமதமாகலாம் என கூறப்படுகிறது. ஐசிசியிடம் பிசிசிஐ இந்திய அணி அறிவிப்பிற்கு ஒருவார காலம் அவகாசம் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 18 அல்லது 19ம் தேதி தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவிக்கலாம் என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

இதில் டி.20 போட்டி முறையே வரும் 22ம் தேதி கொல்கத்தா, 25ம் தேதி சென்னை, 28ம் தேதி ராஜ்கோட், 31ம் தேதி புனே, பிப்.2ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. டி.20 போட்டிக்கான அணி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ஒருநாள் போட்டிக்கான அணி சாம்பியன் டிராபி தொடருக்கான அணி அறிவிப்பின்போது வெளியாகும் என கூறப்படுகிறது. டி.20 அணியில் கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான ஆடிய வீரர்களே இடம் பெறக்கூடும். பும்ரா, சிராஜ், ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட் போன்ற வீரர்கள் ஆட வாய்ப்பு இல்லை.

The post சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்: அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article