கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்: போலீசார் விசாரணை

5 hours ago 3

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் அங்காள பரமேஸ்வரி மெயின் ெதருவை சேர்ந்தவர் அன்பரசன் (38). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். அன்பரசன் மனைவி வள்ளி வாசுகி என்பவர் கடந்த 5ம் தேதி திருநெல்வேலியில் இருந்த வீட்டிற்கு வந்து இருந்த அவரது சித்தி தங்கம் என்பவரிடம், தான் புதிதாக வாங்கிய நகையை எடுத்து காட்டியுள்ளார்.

தங்கம் ஊருக்கு சென்ற பிறகு, மீண்டும் நகைகளை சரிபார்த்துவிட்டு நேற்று முன்தினம் அன்பரசன் சகோதரன் தமிழரசன் வெளிநாடு செல்வதற்காக இருந்த நிலையில், அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகைகளை கழற்றி வள்ளிவாசுகியுடம் கொடுத்துள்ளார். அதன்படி நகையை வாங்கி பீரோவில் உள்ள நகை பையில் வைக்க சென்ற போது, பை திறந்து இருந்தது. இதனால் சந்தேகமடைந்து நகைகளை சரிபார்த்த போது, அதில் மொத்த நகைகளில் 40 சவரன் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அன்பரசன் எம்ஜிஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் அன்பரசன் வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வராத நிலையில் நகைகள் மட்டும் மாயமாகி இருப்பதால், அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article