கடைகளில் அலைமோதிய கூட்டம் காய்கறி, மளிகை பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன

1 month ago 5

சென்னை: சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காய்கறிகள், மளிகை பொருட்கள், மெழுகு வர்த்திகள் என அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பால் பாக்கெட்களும் காலியாகின. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மழை வெள்ளம் ஏற்பட்டால் பொருட்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில், ஸ்டாக் வைப்பதற்காக மளிகை, காய்கறி மற்றும் பால் பாக்கெட்களை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாங்கினர்.

மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காய்கறிக் கடைகளிலும் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. தாமதமாக கடைகளுக்கு சென்ற சிலர், எந்தப் பொருளும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். தொடர் மழையால் மின்சாரம் தடை படலாம் எனக் கருதி, ஏராளமானோர் மெழுகுவர்த்திகளை வாங்கி பைகளில் அடுக்கிக் கொண்டனர். பால் பாக்கெட்களும் கிடைக்கவில்லை. பவுடர் பால் கூட விற்றுத் தீர்ந்து விட்டது. சென்னையில் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஈர மாவு பாக்கெட்கள், கோதுமை மாவு, ரெடிமேட் உணவு பாக்கெட்கள் அதிகமாக விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கடைகளில் அலைமோதிய கூட்டம் காய்கறி, மளிகை பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன appeared first on Dinakaran.

Read Entire Article