கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எதிர்ப்பு

2 hours ago 3

சென்னை: கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்திய நாளில் இருந்து வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அந்தந்த சூழ்நிலைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து கோரிக்கை மனுக்களை அளித்து, பலவிதமான பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது தீர்வுகண்டு வந்திருக்கிறது.

Read Entire Article