கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் - வி.நாராயணன் பேட்டி

3 weeks ago 3

கன்னியாகுமரி,

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மிகவும் முக்கியமான பொறுப்பை பாரத பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய பெரிய வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பிரதமர் அறிவுறுத்தலின்படி கூட்டு முயற்சி மூலம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

சொந்த உழைப்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன். கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கும்போது அண்டை நாடுகளை நம்பி இருந்தது; தற்போது 432 வெளிநாட்டு செயற்கைகோள்கள் நமது ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

தற்போது இரண்டு செயற்கைகோள் டாக்கிங் என்பது வெற்றிகரமாக நடந்துள்ளது. இது எதிர்காலத்தில் சந்திரயான் 4 நிலவில் தரை இறங்க உள்ளது. அதற்கு இது பயன்பெறும். இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காகவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் பயன்பெறும். இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article