புதுடெல்லி: மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய பாஜ எம்பி ராம்வீர் சிங் பிதுரி, ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது மக்களுக்கு வீட்டு வசதி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட சலுகைகளை பறித்துவிட்டது. ஆம் ஆத்மி அரசு டெல்லியை கொள்ளையடித்து நரகமாக மாற்றியுள்ளது.
யமுனை நதிக்கரையில் பல்லுயிர் பூங்கா அமைத்தல், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு விரைவு சாலைகள், தலைநகர் டெல்லியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற மேம்பாட்டு பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகின்றது. கடவுள் பூமிக்கு இறங்கி வந்தால் மட்டுமே இதுபோன்ற பணிகள் சாத்தியமாகும். இல்லையெனில் இதுபோன்ற அற்புதங்களை மோடியால் மட்டுமே செய்ய முடியும். வேறு யாராலும் செய்ய முடியாது” என்றார்.
The post கடவுள் அல்லது மோடியால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: பாஜ எம்பி ஆருடம் appeared first on Dinakaran.