கடலோர காவல்படை ஆபீசில் 10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை

6 months ago 17

1. Engine Driver: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
2. Lascar: 1 இடம். (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் லஸ்கர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Draughtsman: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/மரைன் இன்ஜினியரிங்/ நேவல் ஆர்க்கிடெக்சர் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
4. Fireman/Mechanic Fireman: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர்மேன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்த பட்சம் 165 செ.மீ., உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 கிலோ எடை இருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 63.5 கிலோ எடையுள்ள ஒரு மனிதனை தூக்கிக் கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் தூரம் ஓட வேண்டும். 2.7 மீட்டர் அகலம் தாண்ட வேண்டும். 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏற வேண்டும்.
5. Civilian Motor Transport Driver: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய டிரைவிங் லைசென்ஸ், மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Multi Tasking Staff (Mali): 2 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மாலி பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Multi Tasking Staff (Chowkidar): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சவுகிதர் பணியில் 2 ஆண்டு முன்அனுபவம்.
8. Motor Transport Fitter: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 18 முதல் 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் 2 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
9, Electrical Fitter/ ICE Fitter: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ படித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. Unskilled Labour: 1 இடம் (ெபாது). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, சுலப கணிதம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த ேகள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2024.

The post கடலோர காவல்படை ஆபீசில் 10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Read Entire Article