
அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீச்சார் வருவதை கண்ட செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடினர்.
இந்த நிலையில் அந்த கொட்டகையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் , அச்சடிக்கும் எந்திரம், பேப்பர் பண்டல் என மொத்தம் ரூ. 83,500 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.