கடலூரில் நூதன முறையில் கைவரிசை முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.5.24 லட்சம் நூதன திருட்டு

1 week ago 3

 

கடலூர், ஜூன் 27: கடலூரில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவர் மற்றும் வாலிபரிடம் நூதன முறையில் ரூ.6¼ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து தனது கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த முதியவரிடம் தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை வங்கியின் உள்ளே வைத்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த முதியவர் வங்கிக்கு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று முன்தினம் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதியவரிடமும், வாலிபரிடமும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கடலூரில் நூதன முறையில் கைவரிசை முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.5.24 லட்சம் நூதன திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article