கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ரத்து: கடும் சிரமத்தை சந்தித்த பொதுமக்கள்

3 months ago 15

சென்னை: கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் ரத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கு மாற்றாக, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் நேற்று பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வரை மின்சார ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டது.

Read Entire Article