கடன் தொல்லையால் பெண் தற்கொலை பாஜ பிரமுகர் மீது கணவர் புகார்

1 week ago 2

*பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் மனு

திங்கள்சந்தை : வில்லுக்குறி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக, சுயஉதவிக்குழுவினர் மற்றும் பாஜ பிரமுகர் மீது பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (58). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஜெயராணி கேனிஷ் (52). இந்த தம்பதிக்கு பெர்ஜின் ராஜேஷ் (27) என்ற மகனும், ஜெனிஸ்கா (24) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஜெனிஸ்காவுக்கு திருவட்டார் பகுதியை சேர்ந்த கவின் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகளின் திருமணத்திற்காக மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் பாஜக பிரமுகர் ஒருவரிடமும் கடன் பெற்றதாக தெரிகிறது. போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் கட்ட முடியாமல் ஜெயராணி தவித்துள்ளார்.

இதனால் பாஜ பிரமுகர் அடிக்கடி ஜெயராணியின் வீட்டுக்கு வந்து கடனை திரும்பக்கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சுய உதவிக்குழுவினரும் அடிக்கடி தொல்லை கொடுத்தார்களாம். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த ஜெயராணி கடந்த 27ம் தேதி இரவு விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தனது மனைவி இறப்புக்கு பாஜக பிரமுகரும், சுய உதவிக்குழுவை சேர்ந்த சிலரும் தான் காரணம். எனவே தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி பால்ராஜ் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

The post கடன் தொல்லையால் பெண் தற்கொலை பாஜ பிரமுகர் மீது கணவர் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article