கடன் தொல்லையால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி - கணவன் உயிரிழப்பு

3 months ago 21

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் - சங்கீதா. இவர்கள் வீட்டிலேயே திண்பண்டங்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் சொந்த வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு, மற்றும் தனி நபர்களிடம் சுரேஷ் கடன் வாங்கியுள்ளார்.

கடனை திருப்பி கேட்டு ஏராளமானோர் தொந்தரவு செய்ததால், விரக்தியடைந்த இருவரும் வீட்டில் வைத்து கழுத்தறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில், சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

Read Entire Article