மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மனைவி கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனை தடுக்க முயன்ற சயிஃப் அலிகானை மர்ம நபர் ஆறு முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் மும்பை கான் பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அலிகான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பாந்த்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் 35 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ்தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் தாஸ் என்ற நபரை தானேவில் மும்பை போலீஸ் கைது செய்தது. சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியதை விஜய் தாஸ் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைஃப் அலிகான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்திருந்தாலும், அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியது அவரது ரசிகர்களை ஆறுதலடைய செய்துள்ளது.
The post கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் ஆனார்! appeared first on Dinakaran.