கோவை, அக்.8: கோவை மாநகராட்சி சார்பாக சிறப்பு வரிவசூல் முகாம் கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் கடந்த 2 நாட்களுக்கு (6 மற்றும் 7ம் தேதி) நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் கடந்த 6ம் தேதி நடைபெற்ற முகாமில் மொத்தம் ரூ. 22 லட்சத்து 46 ஆயிரத்து 756 வசூலிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற முகாமில் மொத்தம் ரூ. 11 லட்சத்து 13 ஆயிரத்து 469 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு வரி வசூல் முகாமில் மொத்தம் ரூ.33 லட்சத்து 60 ஆயிரத்து 225 வசூலிக்கப்பட்டது.
The post கடந்த 2 நாட்கள் நடைபெற்ற மாநகராட்சி சிறப்பு முகாமில் ரூ.33.60 லட்சம் வரி வசூல் appeared first on Dinakaran.