கடந்த 10 ஆண்டுகளில் 5,000 இந்தியக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுப்பு: ஒன்றிய அரசு தகவல்

4 weeks ago 5

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், ‘வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக அரசுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 4,963 குழந்தைகள் வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,031 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர்.

இத்தாலியில் 1,029 பேரும், ஸ்பெயினில் 517 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 252 பேரும், மால்டாவில் 215 பேரும் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார். கனடா ஆதாரம் தரவில்லை: காலிஸ்தான் தீவிரவாத விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டிய கனடா தான் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் வழங்கவில்லை என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

மத மாற்றங்களின் தரவு பராமரிக்கப்படவில்லை: மத மாற்றம் தொடர்பான விவகாரம் மாநில அரசுகளின் பிரச்னை. எனவே அது தொடர்பான தரவுகள் எதுவும் ஒன்றிய அரசால் பராமரிக்கப்படவில்லை என்று மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

The post கடந்த 10 ஆண்டுகளில் 5,000 இந்தியக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுப்பு: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article