கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

7 hours ago 3

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013ல் ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் விடுதலை அவர்கள் செய்யப்பட்டனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.

Read Entire Article