கஞ்சா விற்ற 2 பேர் குண்டாசில் கைது

3 months ago 20

தர்மபுரி, அக்.4: தர்மபுரி மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில், மதுவிலக்கு போலீசார் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, பாலக்கோடு பகுதியில் மதுவிலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தக்காளி மார்க்கெட் அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா பெட்டலங்கள் இருந்தது. இதையடுத்து வெள்ளிச்சந்தையை சேர்ந்த மாதேஷ் மகன் தமிழரசன் (25), பென்னாகரம் மாதேஷ் மகன் மணிகண்டன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பாலக்கோடு பகுதி கல்லூரி மாணவர்களுக்கு, தொடர்ந்து கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சாந்தி, தமிழரசன், மணிகண்டன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் இருக்கும் இருவரிடம் வழங்கப்பட்டது.

The post கஞ்சா விற்ற 2 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article