கஞ்சா வாலிபருக்கு 2 ஆண்டு சிறை: மதுரை கோர்ட் தீர்ப்பு

3 days ago 2

 

மதுரை, மார்ச் 29: கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மதுரை, புதுமகாளிப்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தி நடப்பதாக, கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை செய்தபோது அவ்வழியே டூவீலரில் வந்த ஆசை(எ) நாகமுருகனிடம் இருந்த கட்டைப்பையில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஷ்வரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் கஞ்சா கடத்தியது உறுதியானதால் ) நாகமுருகனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா வாலிபருக்கு 2 ஆண்டு சிறை: மதுரை கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article