செய்யாறு, மே 20: செய்யாறு அடுத்த தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மகாஜனம்பாக்கம் குளக்கரையிடம் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி விசாரித்த போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குகந்திரன் (24), காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் பகுதி சேர்ந்த சிங்கார குமரன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
The post கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.