கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு: நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி விசாரணைக்கு ஆஜர்

3 hours ago 1

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ. 3 கோடி உயர் ரக கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் இன்று ஆலப்புழா கலால் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலால்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவுடன் தஸ்லீமா சுல்தான் என்ற இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் தஸ்லீமா சுல்தானாவுக்கும், பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி மற்றும் மாடல் அழகியான சவும்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 28ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 3 பேருக்கும் ஆலப்புழா கலால்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று காலை நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, மாடல் அழகி சவும்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரையும் ஒன்றாக ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு: நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article