கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அரசு

2 months ago 21

புதுடெல்லி,

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விலை மேலும் உயரும்; கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றெல்லாம் சர்வதேச அளவில் யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: நாம் கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் பெறுகிறோம். இதற்கு முன்னர் 27 நிறுவனங்கள் மூலம் தான் பெற்று வந்தோம். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது.

உலக சந்தையில், புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்துள்ளன. சர்வதேச அளவில் , எங்குமே பற்றாக்குறையே இல்லை. நடப்பு 2024 ஜூலை கணக்கின்படி, கச்சா எண்ணெய் இறக்குமதியில், நாம் ரஷ்யாவிடமிருந்து 44 சதவீதம் பெறுகிறோம். இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.

Read Entire Article