கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

1 day ago 3

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார்.

கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

Read Entire Article