கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

19 hours ago 2

சென்னை: இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் , இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்: பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

Read Entire Article