கசகசா பாத்

1 month ago 10

தேவையானவை:

சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 6,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 3,
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,
சீரகம் – கால் டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.

செய்முறை:

கசகசா, முந்திரியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, அரைத்த கசகசா விழுது, உப்பு, ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். வெஜிடபிள் குருமாவோடு பரிமாறவும்.

The post கசகசா பாத் appeared first on Dinakaran.

Read Entire Article