'கங்குவா' படத்தில் சூர்யாவின் ஏஐ குரல் !

4 months ago 28

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் குரலை அசலாக இன்னொரு மொழிக்கு டப்பிங் செய்ய முடிகிறது. இதனால் தான், கங்குவா படக்குழு சூர்யாவின் குரலே மற்ற மொழிகளிலும் இருக்கட்டும் என முடிவு செய்து அதை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

Read Entire Article