ஊட்டி,ஜூலை4: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணிகளை தமிழ்நாட்டில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியை சென்னையில் கடந்த 1ம் தேதி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லும் வகையில்,அனைத்து பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் ஏன் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அந்தந்த மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுக்கூட்டங்கள் வாயிலாக விளக்கி கூறினார்.இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள ஏடிசி சுதந்திர திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி எம்பி ஆ.ராசா கலந்துக் கொண்டு ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்து விளக்கி பேசினார்.
மேலும், ஓரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் பின் திரள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு 127வது வாக்குச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், நகர துணை ெசயலாளர் ரீட்டாமேரி, பிஎல்ஏ 2 ஜெயராமன், பிடிஏ மத்தீன் மற்றும் பிஎல்சி சுசீலா,மஞ்சுளா, தனலட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
The post ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் தீவிரம் appeared first on Dinakaran.