ஓய்வூதியர் நல அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம்

2 months ago 6

 

ஈரோடு,பிப்.24: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வுதியர்கள் நல அமைப்பு சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று, ஈரோடு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பணப்பலன்கள் ஏதும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு கால தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழ்நாடு அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து, 1.4.2003க்கு பிறகு பணி வரன் முறை செய்யப்பட்ட அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

The post ஓய்வூதியர் நல அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article