ஓய்வுபெற்ற மின்ஊழியர் ஆர்ப்பாட்டம்

3 months ago 11

 

விருதுநகர், நவ.16: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கௌரவத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வூதியத்தை அரசே நேரடியாக பொறுப்பேற்று வழங்கும் என்ற முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி வாரியமே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் தவறு இல்லாமல் பிழையின்றி வழங்க வேண்டும்.

காப்பீடு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். ஊக்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு தொகையை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்டத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீத ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் சந்திரன், ராஜாராம், குருசாமி, புளுகாண்டி, கருப்பையா, மாரிக்கனி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ஓய்வுபெற்ற மின்ஊழியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article