ஓய்வு பெற்ற ஊழியரிடம் ரூ5.30 லட்சம் நூதன மோசடி

2 weeks ago 4

கிருஷ்ணகிரி, நவ.6: வாட்அப் குரூப்பில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ5.30 லட்சம் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் கேசிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது ரத்னம்(59). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை, தெரிந்த நபர் ஒருவர், கடந்த 9.9.2024 அன்று செல்போன் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் சேர்த்துவிட்டுள்ளார். அந்த குரூப்பில் அடிக்கடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது தொடர்பாக குறுந் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. அதில் பணத்தை முதலீடு செய்ய சேது ரத்னம் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கொடுத்த லிங்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

முதலில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ79,474ஐ அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ5.30 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன் பின்பு அவருக்கு எந்த வித லாபமும் கிடைக்கவில்லை. மேலும், அவர்கள் கொடுத்திருந்த லிங்க் மற்றும் செல்போன் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சேது ரத்னம் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓய்வு பெற்ற ஊழியரிடம் ரூ5.30 லட்சம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article