ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் புகார்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்

3 months ago 20

சென்னை,

சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், 'சுவர் அரசு நிலத்திலோ, அரசு செலவிலோ அமைக்கப்படவில்லை. சேலம் ஓமலூர் அருகே மானத்தாள் கிராமத்தில் நிலத்தின் உரிமையாளர் தனது பட்டா நிலத்தில் கால்நடைகள் வளர்க்க கொட்டகை அமைப்பதாகவும், நிலத்தில் சுற்றுச்சுவரும் அமைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவரது நிலத்திற்கு அருகே ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இரண்டிற்கும் இடையில் கிராம நத்தத்திற்கு செல்லும் கான்கிரீட் சாலையும் உள்ளது. கான்கிரீட் சுவர் தனியாரால் பட்டா நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதை அரசு செலவில் கட்டப்பட்டு வரும் தீண்டாமை சுவர் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என ஓமலூர் வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article