ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

3 weeks ago 3

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது ஒன்றிய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் ஓபிசி இட ஒதுக்கீடு என்ற அழகான ஓவியத்தில் இடைச்செருகலாக துருத்திக் கொண்டிருக்கும் கிரீமிலேயர் முறை அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article