ஓட்டுநருக்கு வாந்தி, மயக்கம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

4 weeks ago 6

சென்னை, டிச.21: திருப்பதியில் இருந்து சென்னை வந்த சப்தகிரி விரைவு ரயில் திருவள்ளூர் அருகே வந்தபோது ரயில் ஓட்டுனருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது.
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சப்தகிரி விரைவு ரயில் நேற்று முன்தினம் பிற்பகல் புறப்பட்டது. யுகேந்திரன் என்பவர், ரயிலை ஓட்டி வந்தார். மேலும், ஏராளமான பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்தனர். திருவள்ளூர் அருகே வந்தபோது, யுகேந்திரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனால் வேறு வழியின்றி இரவு 9 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலைய 3வது நடைமேடையில் ரயிலை யுவராஜ் நிறுத்தினார். திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு யுகேந்திரன் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து மாற்று ரயில் ஓட்டுனர் வரவழைக்கப்பட்ட இரவு 10.15 மணியளவில் ரயில் புறப்பட்டது. இதற்கிடையில் பயணிகளில் சிலர், புறநகர் ரயில் மூலமாக சென்ட்ரலுக்கு சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

The post ஓட்டுநருக்கு வாந்தி, மயக்கம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article