மூணாறு, ஏப்.29: மூணாறு அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் மூணா று அருகே உள்ள அடிமாலியில், நேற்று முன்தினம் கோதமங்கலம் பகுதியில் இருந்து அடிமாலிக்கு பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. அதில் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் அருகில் இருந்த முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து அப்பெண், கூச்சலிட்டதை அடுத்து, சக பயணிகள் முதியவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் அடிமாலி பகுதியைச் சேர்ந்த மத்தாயி (70) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்து, அடிமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
The post ஓடும் பேருந்தில் சில்மிஷம் முதியவர் கைது appeared first on Dinakaran.