
ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று கோவையில் இருந்து அரசு பேருந்தில் நெல்லைக்கு சென்றார். அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த மகாலிங்கம் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து செல்போன் மூலம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள், நடத்துனர் மகாலிங்கத்தை பிடித்து புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புறக்காவல் நிலைய போலீசார், மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்துனர் மகாலிங்கத்தை கைது செய்தனர். அரசு பேருந்து நடத்துனர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.