ஓசூர் கோர்ட்டுக்கு 5 துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் 10 பேர் கைது

4 months ago 17

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கொளதாசபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே, கடந்த செப்டம்பர் 18ம் தேதி இரவு, கர்நாடக மாநிலம் சூளகுண்டா பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (26) கொலை செய்யப்பட்டு கிடந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த ரேவண்ணா மற்றும் உடந்தையாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரேவண்ணா, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று காலை, ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர் காரில் வந்தார். அப்போது, பாதுகாப்பிற்கு மற்றொரு கார் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகலூர் போலீசார் சோதனையிட்டனர். அதில், 5 கைத்துப்பாக்கிகள் இருந்தது. அவற்றையும் காரையும் போலீசார் கைப்பற்றினர். நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த ரேவண்ணா உள்பட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post ஓசூர் கோர்ட்டுக்கு 5 துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் 10 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article