ஓசூர், நவ.28: ஓசூர் மாநகராட்சியில் கடந்த வாரம் நடந்த மாமன்ற கூட்டத்தில், 33வது வார்டு உறுப்பினர் இந்திராணி முனிராஜ், தனது வார்டில் உள்ள குறைகளை தெரிவித்து, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், நேற்று அதிகாலை 33வது வார்டுக்கு உட்பட்ட சாந்தி நகர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி ஊழியர்களிடம் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர, நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பிரவீன்குமார், சாந்தி நகர் மேற்கு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சுப்பிரமணி, ஜகன்நாத், தேவராஜன், இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ஓசூர் 33வது வார்டில் கமிஷனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.