ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்: 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர்

6 hours ago 1

ஓசூர்,

ஓசூர் அருகேயுள்ள மலைக் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (30). இவருக்கும், 14 வயது சிறுமிக்கும் கடந்த 3-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் நாகம்மாவும் (29) உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மலைக் கிராமத்துக்கு மாதேசும், சிறுமியும் வந்தனர்.

இதனிடையே, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி வந்த சிறுமி, நேற்று காலை மாதேஷின் வீட்டிலிருந்து தப்பி, அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த மாதேஷின் உறவினர்கள் சிறுமி தஞ்சமடைந்த வீட்டுக்குச் சென்றனர். சிறுமியை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு அவர்களது வீட்டுக்குச் சென்றனர். அப்போது சிறுமி கதறி அழுதார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

Read Entire Article