ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' படம்

3 months ago 23

சென்னை,

அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்து கடந்த மார்ச் 22-ம் தேதி வெளியானது. 'பிரேமலு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.  

#REBEL, streaming on Simply South from October 11 worldwide, excluding India. pic.twitter.com/HQxH3BUOQ3

— Simply South (@SimplySouthApp) October 8, 2024
Read Entire Article