கோவை: பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை அடுத்த நவமலை அருகே ஒற்றை காட்டு யானை விரட்டி வந்து தாக்கியதால் கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. காரில் பயணித்தவர்கள் லேசான காயமக்களுடன் உயிர் தப்பினர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிகிறது. அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் ஆழியார் வால்பாறை சாலையில் யானை உலா வருவதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்த வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் ஆனைமலை அடுத்த நவமலை பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொண்டுவிட்டு, இவருடன் பணிபுரியும் சந்தோஷ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருடன் அப்பர் ஆழியார் செல்வதற்காக செல்லும்போது எதிர் திசையில் ஒற்றை யானை அதிவேகமாக வந்து அவர்கள் பயணித்து வந்த காரை தாக்கி பள்ளத்தில் தள்ளிவிட்டது.
இதன் காரணமாக கார் 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. காரில் பயணித்த 3 பெரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
The post ஒற்றை காட்டு யானை விரட்டி வந்து தாக்கியதில் கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.