ஒற்றை ஆட்சியை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி; மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: திமுக எம்எல்ஏ எழிலன் பேட்டி!

2 months ago 11

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை மாலை 4 மணிக்கு ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெறும். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ எழிலன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

ஒற்றை ஆட்சியை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி: எழிலன்
பல்வேறு துறைகளில் ஒற்றை ஆட்சியை நுழைக்கும் வகையில் ஒன்றிய அரசு. மாநில அரசின் சுயமரியாதையை கொச்சைப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசின் நடவடிக்கை உள்ளது.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: எழிலன்
ஒன்றிய அரசு திணிக்க நினைக்கும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்.

மும்மொழிக் கொள்கை பெயரில் இந்தி திணிக்க முயற்சி: எழிலன்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு புயல் நிவாரண நிதியை கூட ஒன்றிய அரசு
வழங்கவில்லை.

கே.வி. பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை: எழிலன்
ஒன்றிய அரசின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு சூழலியல் சார்ந்த கல்வியை கற்பிக்க வேண்டும். இரு மொழிக் கொள்கையால்தான் தமிழர்கள் தற்போது சமூக பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் சமூக பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளார்களா என திமுக எம்.எல்.ஏ. எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஒற்றை ஆட்சியை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி; மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: திமுக எம்எல்ஏ எழிலன் பேட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article