ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்: டாக்டர் நெகிழ்ச்சி

6 months ago 20

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதி ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி வரை 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 இரட்டையர்கள் 72 மணிநேரத்திற்குள் பிறந்துள்ளனர். அதிலும் அனைவருக்கும் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

எடை குறைவாக இருந்ததால் ஒரு பெண் குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நிலாய் ஜெயின் என்பர் கூறுகையில், எனது 30 வருட அனுபவதில் இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Read Entire Article