திருமலை: தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் கும்மூர் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி சூரிய தேவ். அதே கிராமத்தை சேர்ந்த லால் தேவி, ஜல்க்கர் தேவி ஆகியோர் சூரியதேவ்வை காதலித்து வந்தனர். இந்த முக்கோண காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் கண்டித்தனர். ஆனால் இளம் பெண்கள் இரண்டு பேரும் சூரிய தேவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்தனர். மூன்று பேரும் மேஜர் என்பதால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களுக்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்தனர். அப்போது சூரியதேவ் ஒரே மேடையில் இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்து தாலி கட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post ஒரே மணமேடையில் தாலிகட்டி 2 காதலிகளை மணந்த வாலிபர்: தெலங்கானாவில் விசித்திரம் appeared first on Dinakaran.