வேலூர், பிப்.13: வேலூர் பதிவு மண்டலத்தில் 375 ஆவணங்கள் மூலம் ₹1.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தைப்பூச நாளான நேற்று முன்தினம் அரசு விடுமுறை அளித்திருந்த நிலையில் பத்திரவுப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் பதிவு மண்டலத்தில் உள்ள 45 சார் பதிவாளர் அலுவலகங்கள் காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது. அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 375 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ₹1.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ராணிப்பேட்டையில் 52 ஆவணங்கள் மூலம் ₹22.9 லட்சம், செய்யாறில் 80 ஆவணங்கள் மூலம் ₹77.3 லட்சம், திருவண்ணாமலையில் 131 ஆவணங்கள் மூலம் ₹51.7 லட்சம், வேலூரில் 70 ஆவணங்கள் மூலம் ₹22.75 லட்சம், திருப்பத்தூரில் 42 ஆவணங்கள் மூலம் ₹23.47 லட்சம் என 375 ஆவணங்கள் மூலம் ₹1.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஒரே நாளில் 375 ஆவணங்கள் பதிவு ₹1.98 கோடி வருவாய் வேலூர் பதிவு மண்டலத்தில் appeared first on Dinakaran.