
லக்னோ,
இன்றைய கால இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் காலையில் ஒரு பெண்ணையும் மாலையில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்த சம்பவம் திகைக்க வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். 2 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது பெற்றோர் அந்த வாலிபருக்கு திருமணம் பேசி உள்ளனர். இதை அறிந்த அவரின் காதலி வாலிபரிடம் கேட்டபோது உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதி அளித்துள்ளார்.அதன்படி சம்பவத்தன்று, காலை தனது காதலியை திருமணம் செய்துள்ளார். பின்னர் மாலையில் தனது பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்துள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலி வாலிபரின் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் அவரை வெளியேற்றிவிட்டனர். இது குறித்து காதலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.